Friday, 15 February 2013
அறமும், தார்மீகமும் இல்லாத… (June 12th, 2011)
மீண்டும் சொல்கிறேன். சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் பல நல்ல விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் நான் எழுதிய ஒரு சிறு பதிவு இது:டியர் விநாயக முருகன்,நீங்கள் கொடுத்த லிங்கில் இருந்த அவதாரம் என்ற கதையைப் படித்தேன். அதை என்றும் கட்டுரை என்றும் கொள்ளலாம். சிலருக்கு வார்த்தை என்பது பூக்காரிகளின் பூ போல. ஒரு பூக்காரி தன் வாழ்வில் எவ்வளவு பூக்களைத் தொடுத்திருப்பாள்? யோசித்துப் பாருங்கள். தினமும் காலையிலும் மாலையிலும் அவளுடைய தலையாய வேலை பூத்தொடுப்பது. எத்தனை கோடிப் பூக்கள்! ஆனால் உங்களாலும் என்னாலும் பூத் தொடுக்க முடியாது. தெரியாது. அது ஒரு வேலை. அதேபோல் உ.த.எ. வார்த்தைகளை வைத்துத் தொடுக்கிறார். தொடுத்துக் கொண்டே இருப்பார். அதில் அடி உதை இருக்கலாம்; அறம் மறம் முறம் எல்லாமும் இருக்கலாம். வெறும் வார்த்தைக் கூட்டம். குஷ்வந்த் சிங் சொன்னார், சில எழுத்தாளர்களின் விரல்களுக்குக் காண்டம் போட்டால் என்ன என்று. அதுதான் உ.த.எ. விஷயத்திலும். நாம் நம்முடைய வாழ்நாளில் எத்தனை லிட்டர் மூத்திரம் போகிறோம்? யாருக்காவது கணக்கு தெரியுமா? உ.த.எ.விடம் அப்படி வெளிப்படுவது வார்த்தை. ஆனால் எனக்கு வார்த்தை என்பது ஆன்ம சுத்தி. 20 லட்சம் ரூபாய் கிடைக்கிறது என்பதற்காக நான் மணி ரத்னத்தின் காலில் போய் விழ மாட்டேன். பிஸ்கட் போடுபவனின் கையை நக்கும் நாயைப் போன்ற ஈனச் செயலை நாள் தோறும் செய்து கொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்து உங்களுக்குத் தார்மீகக் கோபம் வர வேண்டாமா விநாயக முருகன்? கதை என்பது, வார்த்தை என்பது, எழுத்து என்பது நாம் தினம்தோறும் பெய்யும் மூத்திரத்தைப் போன்றதுதானா? நாம் சொல்கின்ற வார்த்தைக்காக நாம் நம்முடைய உயிரையும் கொடுக்கச் சித்தமாக இருக்க வேண்டாமா?இப்படி பிஸ்கட் போடுபவனின் கையை நக்கும் நாயின் குணத்தையா நம் ஆசான் பாரதி நமக்குக் கற்றுக் கொடுத்தான்? உத்தமத் தமிழ் எழுத்தாளர் நாள் தவறாமல் பேசும் அறமும் ஆன்மீகமும் அவரது ஒரு நடவடிக்கையிலாவது இருக்கிறதா? சினிமா உலகில் அவர் செய்து கொண்டிருக்கும் அசிங்கமான வேலைகளைப் பார்த்து சினிமாத் துறையில் இருப்பவர்களே காறித் துப்புகிறார்கள்… ஒரு பக்கம் இந்துத்துவம் பேசுவார். இன்னொரு பக்கம் ஏதாவது இஸ்லாமிய அமைப்பு அவரை மதித்து ஒரு கூட்டத்துக்கு அழைத்தால் இந்துத்துவத்தைத் திட்டுவார். சில மாதங்களுக்கு முன்பு கூட ஒரு கிறிஸ்தவ பாதிரி இவரைப் பாராட்டிக் கடிதம் எழுதிவிட்டார் என்பதற்காக இவர் “தங்கள் காலில் விழுகிறேன். என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியுங்கள்” என்று எழுதி அதையும் தன் ப்ளாகில் போட்டிருந்தார். அதில் என்ன வேடிக்கை என்றால், அந்தப் பாதிரியார் மீது ஊர் சொத்தைக் கொள்ளையடித்த ஊழல் வழக்கு நிலுவையில் இருந்தது… காசுக்காகவும், புகழுக்காகவும் பிணத்தின் நெற்றியில் உள்ள நாணயத்தைக் கூட சுரண்டத் தயாராக உள்ள ஒருவரைப் பற்றி நம்முடைய வாசகர் வட்டத்தில் நீங்கள் எழுதலாமா முருகன்? உங்களுடைய வாசிப்பை நான் குறை சொல்லவில்லை. ஆனால் இதைப் பலர் முன்னிலையில் விவாதிக்கும் அளவுக்கு அவர் ஆளா என்று மட்டுமே கேட்கிறேன். நான் தவறாகச் சொல்லியிருந்தால் மன்னியுங்கள்.ஒரு எழுத்தாளனுக்குத் தார்மீக பலம் வேண்டும். ராம் ஜெத்மலானியை எடுத்துக் கொள்ளுங்கள். பணம் கொடுத்தால் இந்திய தேசத்தை தாவூத் இப்ராஹீமிடம் விற்ற ஆளுக்காகக் கூட வாதாடுவார். ஒரு எழுத்தாளன் அப்படி இருக்கலாமா?நீங்கள் குறிப்பிடும் கதையில் – அல்லது, கட்டுரையில் – எனக்குத் தெரிய வந்த ஒரே விஷயம். உ.த.எ.வுக்கு நன்றாக சினிமா வசனம் எழுத வருகிறது… அதாவது, விஜய் போன்ற நடிகர்களின் சினிமாவுக்கு… இப்படிப்பட்ட கமர்ஷியல் சினிமா வசனகர்த்தாக்களைப் பற்றி நாம் இவ்வளவு சீரியஸாக விவாதிக்கத்தான் வேண்டுமா?***மேற்கண்ட விஷயத்தை எழுதிய பிறகுதான் தெரிந்தது; அந்தக் குறிப்பிட்ட அவதாரம் பைபிளிலிருந்து தூக்கியது என்று. இதோ லிங்க்:
Friday, 22 February 2013
யு எஸ் தமிழன் மண்டையின் அல்லகைகளில் ஒருவரா?
Labels:
அல்லக்கை,
சாரு,
யு எஸ் தமிழன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment